தெரிந்து கொள்ள வேண்டிய சிறந்த கதை

Bib;e and Candle

இவ்வுலகில் ஒருகாலத்தில் எதுவுமே

இருந்ததில்லை மீன்கள் இல்லை 

வான் வெளியில் நட்சத்திரங்கள் இல்லை,

முழுமையான உரை: தெரிந்து கொள்ள வேண்டிய சிறந்த கதை

கடல்களோ அழகிய மலர்களோ இல்லை, 

எல்லாம் வெட்ட வெளியாகவும் இருள்சூழ்ந்தும் இருந்தது, 

ஆனால் தேவன் இருந்தார் :நாம் இன்று ஜெபிக்கும் அதே தேவன்தான்.

தேவனுக்கு ஒரு மேம்பாடான திட்டம் இருந்தது. அவர் ஒரு அழகிய உலகத்தைப் பற்றிச்சிந்தித்தார், அவர் சிந்திக்கும் போது அவர் உண்டாக்கவும் செய்தார். அவர் எல்லாவற்றையும் ஒன்றுமில்லாமையிலிருந்து உண்டாக்கினார். தேவன் எதையும் உண்டாக்கும் போது, அவர் “அது உண்டாகக் கடவது” என்பார்.அது உண்டாகி இருக்கும்!

அவர் வெளிச்சத்தை உண்டாக்கினார். அவர் ஆறுகளையும், கடல்களையும், புல் மூடிய பூமி, விலங்குகள் பறவைகள், மரங்களையும் உண்டாக்கினார்.

எல்லாவற்றிருக்கும் கடைசியாக அவர் மனிதனை உண்டாக்கினார், பிறகு அந்த மனிதனுக்கு ஒரு மனைவியையும் உண்டாக்கினார். அவர் அவர்களுக்குப் பெயர்களும் கூடக்கொடுத்தார்- ஆதாம், ஏவாள்

அவர் அவர்களை மிகவும் நேசித்தார். அவர்கள் வசித்த அழகிய தோட்டத்தில் ஒவ்வொரு மாலையிலும் அவர்களைப் போய்ச்சந்தித்தார்.

ஒரே ஒரு மரத்தைத் தவிர, அந்த முழு தோட்டத்தையும் அவர்கள் அனுபவிக்கலாம். அது ஒன்று மட்டுமே தேவன் விலக்கிய மரம்.

தேவனின் பகைவனாகிய சாத்தான், ஒரு நாள் அவர்களைச் சோதிக்கும் வரையிலும் ஆதாமும், ஏவாளும் மகிழ்ச்சியாகத்தான் இருந்தார்கள். சாத்தானின் தூண்டுதலின் பேரில் தேவன் விலக்கிய மரத்தின் கனியை ருசித்துப் பார்க்கக் கடைசியாக அவர்கள் தீர்மானித்தார்கள். அவர்கள் பாவம் செய்தார்கள். முதல் முதலாக அவர்கள் வெட்கமும், கவலையும் அடைந்தார்கள்.

தேவனோடு பேச அவர்களுக்கு கூடாமற்போயிற்று. இப்போதும் வழியும் துன்பமும் அவர்களுக்கு வந்தது. அவர்கள் மரணம் அடையும் வாய்ப்புண்டாயிற்று. அவர்கள் எவ்வளவாக வருந்தினார்கள்!

பிறகு தேவன் அவர்களுக்கு உதவி செய்ய வாக்குக்கொடுத்தார். “தகுந்த காலம் வரும்போது, என்னுடைய குமாரன் இயேசுவை இந்த உலகத்திற்கு அனுப்புவேன். எங்களுடைய மோட்ச வீட்டிலிருந்து தாழ வருவார். அவர் உங்கள் பாவங்களை நீக்குவார். இதைச் செய்வதற்காக அவர் பாடுபட்டு உங்களுக்காக மரிப்பார்” என்று அவர்களுக்கு தேவன் சொன்னார். ஒரு மீட்பரை அவர்களுக்கு தேவன் அனுப்புவார் என்று அவர்கள் மிகவும் மகிழ்ச்சி அடைந்தார்கள்.

ஆதாமுக்கும், ஏவாளுக்கும் பிள்ளைகளும், பேரப்பிள்ளைகளும் பிறந்தார்கள். கொஞ்சம் கொஞ்சமாக உலகத்தில் பல மக்களும் நிறைந்தார்கள்.

தேவன் ஒவ்வொருவரும் மகிழ்ச்சியாக இருக்க வேண்டுமென்று விரும்பினார். அவர்கள் என்ன செய்யவேண்டும் என்று அவர்களுக்குச் சொன்னார். தேவன் அவர்களுக்குக்கொடுத்த சட்டங்களின் பட்டியல் இங்கே உள்ளது. ( யாத்திராகமம்20:3-17)

1. என்னையன்றி உனக்கு வேறே தேவர்கள் உண்டாயிருக்கவேண்டாம்
2. நீ ஜெயிப்பதற்காக யாதொரு விக்கிரகத்தை உண்டாக்க வேண்டாம்
3. நீ தேவனாகிய கர்த்தரின் நாமத்தை வீணிலே வழங்கவேண்டாம்
4. ஓய்வு நாளைப் பரிசுத்தமாக ஆசரிப்பாயாக
5. உன் தகப்பனையும், தாயையும் கனம் பண்ணுவாயாக
6. நீ யாரையும் கொலை செய்யாதிருப்பாயாக
7. நீ விபச்சாரம் செய்யாமலிருப்பாயாக
8. நீ களவு செய்யாதிருப்பாயாக
9. நீ பொய் சொல்லாதிருப்பாயாக
10. பிறனுக்குச் சொந்தமானதை எடுத்துக்கொள்ள இச்சியாதிருப்பாயாக.

நாமும் அவைகளை வாசித்துக் கொள்வதற்காக அவைகள் வேதப்புத்தகத்தில் எழுதப்பட்டிருக்கிறது. அவைகளுக்கு கீழ்ப்படிந்திருந்தால், நாம் மகிழ்ச்சியாக இருப்போம்.

நாம் அவைகளுக்குக் கீழ்படியச் சாத்தான் விரும்பவில்லை. மற்றவர்கள் பார்க்காமல் இருக்கும் போது எதையும் திருடிக்கொள்ள அவன் சொல்கிறான். ஆனால் தேவனுக்கு அது தெரியும். தேவன் எல்லாவற்றையும் பார்க்கிறார்.

சில சமயங்களில் சாத்தான் நாம் ஒரு பொய் சொல்லும்படி சோதிக்கிறான். அதை யாரும் கண்டுபிடிக்க மாட்டார்கள் என்று நினைத்துக் கொள்ளச் செய்கிறான். தேவனுக்கு அது தெரியும். அவர் எல்லாவற்றையும் கேட்கிறார்.

இவைகளை நாம் செய்யும் போது, உள்ளத்தில் கேடு உள்ளதை உணர்கிறோம். தேவன் நம்மை நேசிக்கிறார். நாம் நன்மை செய்ய வேண்டும் என்று நமக்கு உதவி செய்ய அவர் விரும்புகிறார். அதனால் தான் தேவன் இவ்வுலகத்திற்கு இயேசுவைக் கொடுத்தார். தேவன் தம்முடைய வாக்கை நினைத்தார்.

பல ஆண்டுகளுக்கு பிறகு இயேசு ஒரு சிறு குழந்தையாகப் பிறந்தார். அவர் வளர்ந்து ஒரு மனிதன் ஆனார்.

அவர் அநேக வியப்பான காரியங்களெல்லாம் செய்தார். நோயுற்றவர்களை குணமாக்கினார். குருடரைப் பார்க்கச் செய்தார். சிறுவர்களை ஆசிர்வதித்தார்.

இயேசு எந்தத்தவறும் செய்யவே இல்லை. தேவனைப்பற்றியும் அவருக்கு எப்படிக் கீழ்படிய வேண்டும் என்றும் இயேசு மக்களுக்குச் சொன்னார்.

இயேசுவின் விரோதிகள் கொஞ்ச காலத்திற்குப் பிறகு, அவரை ஒரு சிலுவையில் ஆணியினால் அறைந்தார்கள். அவர் இறந்தார்.

எல்லாம் மக்களின் பாவங்களுக்காகவும் அவரைச் சிலுவையில் அறைந்தவர்களுக்காகவும் கூட, அவர் பாடுபட்டு மரித்தார்.

இயேசு அடக்கம் பண்ணப்பட்டார். ஆனால் பிறகு ஒரு வியப்பான காரியம் நடந்தது. அவர் சவக்குழியில் அடங்கியிருக்கவில்லை.அவர் மரணத்திலிருந்து உயிர்த்தெழுந்தார்.

உடனே தேவன் அவரை ஒரு மேகத்தில் இருத்தி வானத்திற்கு அழைத்துக்கொண்டார். அவருடைய நண்பர்கள் இந்தக் காட்சியைப் பார்த்துக் கொண்டிருக்கையில் ஒரு தேவ தூதன் இயேசு திரும்பவும் வருவார் என்று அவர்களுக்கு சொன்னான்.

இயேசு நம்முடைய பாவங்களுக்காகவும் மரித்தார். நம்முடைய பாவங்களுக்காக நாம் மனஸ்தாபப்பட வேண்டும். அறிக்கை செய்ய வேண்டும் என்று அவர் விரும்புகிறார். நம்மை மன்னிக்க அவர் தயாராக இருக்கிறார்.(1 யோவான்1.9)

நாம் எந்த நேரத்திலும் தேவனிடம் ஜெபிக்கலாம். நம் ஒவ்வொரு வார்த்தையும் அவர் கேட்கிறார். நம் ஒவ்வொரு எண்ணத்தையும் அவர் அறிகிறார். நம்முடைய பாவம் மன்னிக்கப்படும்போது நமக்கு உள்ளாக நாம் மகிழ்ச்சியை உணர அவர் செய்கிறார். பிறகு சரியான காரியங்களையே செய்ய நாம் விரும்புவோம். நாம் அன்பாகவே இருக்கவும் விரும்புவோம்.

ஆனால் தேவனுக்கு கீழ்ப்படியாமல் சாத்தானைப் பின்பற்றி போவோமானால், தேவன் நாம் இறந்த பிறகு நம்மை நரத்திற்கு அனுப்புவார். நரகத்தில் நெருப்பு எப்பொழுதும் எரிந்து கொண்டிருக்கும்.

நாம் இயேசுவில் அன்பு கூர்ந்து அவருக்கு நாம் கீழ்ப்படிந்தால், அவர் திரும்ப வரும்போது நம்மையும் சொர்க்கத்திற்கு எடுத்துச் செல்வார். சொர்க்கமானது அன்பும் ஒளியும் நிறைந்த தேவனின் இல்லம்.

அங்கே, எப்பொழுதும் மகிழ்ச்சியாகவே இருப்போம்.

இயேசு என்னை நேசிக்கிறார்! இது எனக்கு தெரியும்

1. இயேசு எந்தன் நேசரே, கண்டேன் வேத நூலிலே
பாலர் அவர் சொந்தம் தான், தாங்க அவர் வல்லோர்தான்

பல்லவி.

இயேசு என் நேசர், இயேசு என் நேசர்
இயேசு என் நேசர், மெய் வேத வாக்கிதே.

2. என்னை மீட்க மரித்தார், மோட்ச வாசல் திறந்தார்:
எந்தன் பாவம் நீக்குவார், பாலன் என்னை இரட்சிப்பார்.

3. நான் நன்மையே செய்கையில் என்னை நேசிக்கிறார்,
என் தீமையிலும் நேசிக்கிறார், மிகவும் வருந்தியே.

4. பெலவீனம் நோவிலும், என்றும் என்னை நேசிக்கும் 
இயேசு தாங்கித்தேற்றுவார்; பாதுகாக்க வருவார்.

5. எந்தன் மீட்பர் இயேசுவே தாங்குவார் என்னருகே;
நேசனாய் நான் மரித்தால் மோட்சம் சேர்ப்பார் அன்பினால்.

தொடர்பு கொள்க

ஆர்டர் பாதைகள்

மரணத்திற்குப் பின்

இந்த வினாடியில் நீங்கள் உயிரோடிருக்கிறீர்கள் ;சுவாசித்து கொண்டிருக்கிறீர்; முறைப்படி உணவு அருந்திக் கொண்டிருக்கலாம்; அங்குமிங்கும் செல்லலாம், பணிபுரியலாம், உறங்கவும் செய்யலாம். சுகவாழ்வு வாழலாம் அல்லது ஏழ்மையில் ஊழலலாம். சூரியன் உதயமாகின்றது, அத்தமிக்கின்றது; ஓரிடத்தில் ஒரு மகவு பெறப்படுகின்றது. ஆன பிற நிகழ்ச்சிகளோடுங்ககூட எங்கோ ஒருவர் மரணம் அடைகின்றார்.

வாழ்க்கை முழுவதும் தற்காலிகச் செயல்கள் தாம்.
ஆனால் மரணத்திற்குப் பின் எங்கே செல்கின்றேன்?

நான் பெயர்க் கிறிஸ்தவனாகவும் இருக்கலாம்.
அல்லது மகம்மதியனாக இருக்கலாம்.
அல்லது புத்த சமயத்தயமைந்தவராயிருக்கலாம்.
அல்லது யூதராயிருக்கலாம்.
அல்லது வேறு ஒரு மார்க்கத்தாராயிருக்கலாம்.
அல்லது எந்த சமயத்தையும் நம்பாதவராகவுமிருக்கலாம். 
ஆனால் நாம் இந்த சிறப்பான வினாவுக்கு விடை மொழியத்தான் வேண்டும்,

ஏனெனில் இக்குறை நேர உலக வாழ்வுக்குப்பின் மனிதன் அவனது நிறைவான நீண்ட நித்திய இல்லம் ஏகின்றான்.

ஆனால் எங்கே?

ஏனெனில்: நீர் அடக்கம் பண்ணப்படும் கல்லறை உமது ஆத்துமாவை அடக்கி வைப்பதில்லை, அல்லது வன விலங்குகளாலோ, பறவைகளாலோ பூசிக்கப்பட்டாலும் அவை உமது ஆத்துமாவை விழுங்குவதில்லை, அல்லது உமது உடலை சுடலையில் இட்டாலும் உமது ஆத்துமாவை அது அழிப்பதில்லை.

உமது ஆத்துமா ஒரு போதும் இறப்பதில்லை!

முழுமையான உரை: மரணத்திற்குப் பின்

வானத்தையும், பூமியையும் படைத்த கடவுள் சொன்னார் “எல்லா ஆத்துமாவும் என்னுடையது “என்று.

(இந்த வாழ்விலே) இந்த உடலினால் நீர் புரிந்த செயல்களை அவை தீமையோ நன்மையோ மறுமையில் உமது ஆத்துமா அல்லது “நீர் சந்திப்பீர்”.

நாம் உண்மையுடன் தொழுதிருக்கலாம்
நாம் தவங்கள் இயற்றியிருக்கலாம்
நாம் களவாய் எடுத்ததைத் திரும்பத் தந்துமிருக்கலாம்
இவை எல்லாம் அவசியந்தான்.

ஆனால்

நமது பாவங்களுக்கு நாமே பிராயச்சித்தம் செய்ய இயலாது. வானலோகத்தின் கடவுள் பூமியின் நீதி தவறாத நியாயாதிபதி உமது பாவத்தையும், வாழ்வையும் அறிந்துள்ளார். உமது பாவத்துடன் எதிர்கால மறு உலகின் ஆசீர்வாதங்களுக்குள்ளும், மகிமைக்குள்ளும் நுழைய இயலாது.

ஆனால்

இந்த வானலோகக் கடவுள் அன்பின் ஆண்டவர் அவர் உமது வாழ்வும் ஆத்துமாவும் மீட்படைய ஒரு வழி வகுத்துள்ளார். 

நீர் ஜெபித்து, உமது பாவங்களை தேவனிடம் அறிக்கையிட்டால், நீர் நித்திய அழிவு, நரகத் தீ என்னும் சாபத்திற்குட்பட வேண்டியதில்லை. தேவன் இயேசுக் கிறிஸ்துவாகிய தமது மகன் மூலமாக மன்னிப்பை அருளுவார்.

இந்த இயேசு உமது தீய செயல்களுக்காக தண்டிக்கப்பட்டார், இந்த இயேசுவை, இக்கர்த்தரை மாத்திரமே நீர் தொழுது, ஜெபித்தால் அவர் உமது வாழ்வுக்குச்’ சாந்தி’ அருளி, மரணத்திற்குப் பின், மகிமையான வாழ்வைக் கொடுப்பார். ஆனால் இந்த இயேசு உயிருள்ள தேவனின் குமாரன் உமது சொந்த மீட்பராக முதலில் ஆக வேண்டும். பிறகுதான் உமது ஆத்துமாவுக்கான மகிழ்வும், ஆறுதலுமான நித்திய இல்லம் நிச்சயமாகும்.

ஆனாலோ! இயேசுவின் இந்த மீட்கும் அன்பை இவ்வாழ்வில் புறக்கணித்தோருக்கு அழிவின் பாதாளமும், முடிவற்ற தீயுமே பங்காகும். மரணத்திற்குப் பிறகு மீட்போ, திருப்பமோ இல்லை. முடிவின்றி நித்தியா, நித்தியமாக நிரந்தர அழுகையும், புலம்பலும்,பற்கடிப்புமே இருக்கும். தூய ‘விவிலிய’ நூல் ஒன்றைப்பெற்று உமக்கான தேவனுடைய திட்டத்தை நீரே படித்துப்பாரும்.

இந்தக் கடவுள், அவரது தூயத் திருமறையில் விரைவில் வரும் உலகின் இறுதி நியாயத் தீர்ப்பை பற்றி விவரமாக எச்சரித்துள்ளார். இந்தத் தூய வேதநூல் அந்த நிச்சயமான நியாயர்தீர்ப்பின் நாளுக்கு முன்னாகத் தெளிவான குறிப்பிடத்தகுந்த அடையாளங்கள் நிகழும் எனவும் முன்னறிவிக்கின்றது.

அவரது வருகைக்கு முன் சண்டைகளும் யுத்தங்களின் செய்திகளும். துன்பமும், நாடுகளுக்குள் கலக்கமும் அதாவது ஒன்றோடொன்று நாடுகள் போர் செய்து கொள்ளும் எனவும் அவைகளின் நோக்கங்கள் கொள்கைகள் ஆனவற்றின் வேறுபாடுகளைத் தீர்த்துக்கொள்ள முடியாதநிலமை இருக்கும் என்றும் கூறுகின்றது அது.

பல இடங்களிலும் பூமி அதிர்வுகளும், கொள்ளை நோய்களும் இருக்கும். இவை யாவும் சமீப ஆண்டுகளில் நிறைவேறிக்கொண்டு வருகின்றன. மேலும் தீயோர் மேலும் தீமையே புரிவர் என்றும் அது முன்னறிவிக்கின்றது. அதே சமயத்திலேயே மக்கள் எச்சரிக்கைகளுக்குச் செவி மடுக்காமல் கடவுளை நேசிக்காமல் இன்பப்பிரியராக ஆவர் என்றும் கூறுகின்றது.

நீதியுள்ள நமது பெரிய நியாயாதிபதி நமது தற்கால செல்வத்தினாலோ, ஏழ்மையினாலோ,புகழினாலோ, இகழ்வினாலோ, நிறத்தினாலோ, இனத்தினாலோ, குலத்தினாலோ, கொள்கையினாலோ,ஈர்க்கப்பட மாட்டார் என்று நாம் ஞாபகத்தில் கொள்ள வேண்டும். அவரது மீட்சியின் வாய்ப்பைப் புறக்கணித்தால் ஒரு நாளில் நமது படைப்புக்கர்த்தாவும் நீதிபதியுமானவர் முன்பாக செயலற்று நிற்போம். வரும் முடிவில்லா நித்தியத்தில் கடிகாரம் இராது. நூற்றாண்டுகளுக்கும் கணிப்பு இராது.

பாவிகள், கடவுளற்றவர்கள் இன்னவரது, உபத்திரவத்தின் புகை எப்பொழுதுமாகப் புகைந்து கொண்டே இருக்கும் அதே சமயத்தில் மீட்க பட்டவர்களது மகிழ்ச்சியும் பாடலும், பேரானந்தமும், சுகமும் மோட்சத்தில் முடிவில்லாததாகவே இருக்கும்.

இப்பொழுதே நீங்கள் ஒன்றைத்தெரிந்துகொள்ளுங்கள்! சீக்கிரமாகவே வேலை பிந்திப்போகலாம்.மத்தேயு, மாற்கு, லூக்கா, யோவான்,ஆகிய நற்செய்திகளை வாசியுங்கள் பின் ஒரு புதியேற்பாட்டையும் கேட்டுப் பெறுங்கள். அதன் பின் முழு விவிலியத்தையும் வாங்கிக்கொள்ளுங்கள்.

தொடர்பு கொள்க

ஆர்டர் பாதைகள்

உன் வாழ்க்கை பதிவேட்டில் பதிவு செய்யப்படுகிறது

இயேசுவானவர்மனுஷர் பேசும் வீணான வார்த்தைகள் யாவையும் குறித்து நியாயத்தீர்ப்பு நாளிலே கணக்கொப்புவிக்க வேண்டும் என்று உங்களுக்குச் சொல்லுகிறேன் ; ஏனெனில், உன் வார்த்தைகளினாலே  நீதிமான் என தீர்க்கப்படுவாய் அல்லது குற்றவாளி என்று தீர்க்கப்படுவாய்மத்தேயு 12:36-37 என்று சொன்னபோது, ஜனங்கள் தங்கள் கிரியைகளுக்கு கணக்கு ஒப்புவிக்க வேண்டும் என்பதை அவர்களுக்கு நினைப்பூacட்டினார். தங்கல் கிரியைகளுக்கு அவர்கள் விளக்கங்கூறி அவைகளுக்கு அவர்கள் கணக்கு ஒப்புவிக்க வேண்டும் என்பது தான் அதின் கருத்து

கர்த்தர் எவ்விதமாக கணக்கு வைக்கிறார் என்பதை பரிசுத்த வேதாகமம் வெளிப்படுத்துகிறதில்லை. ஆனால் அது மிகவும் சரியான பதிவேடாகவும் மாற்றக் கூடாததாகவும் இருக்கும். “மரித்தோராகிய சிறியோரையும் பெரியாரையும் தேவனுக்கு முன் நிற்கக்கண்டேன்; அப்பொழுது புஸ்தகங்கள் திறக்கப்பட்டன. ஜீவ புஸ்தகம் என்னும் வேறொரு புஸ்தகமும் திறக்கப்பட்டது. அந்த புஸ்தகங்களில் எழுதப்பட்டவைகளின்படியே மரித்தோர்  தங்கள், தங்கள் கிரியைகளுக்குத்தக்கதாக நியாயத்தீர்ப்படைந்தார்கள்”. 

ஜீவ புஸ்தகத்திலே எழுதப்பட்டவனாகக் காணப்படாதவனெவனோ அவன் அக்னிக் கடலிலே தள்ளப்பட்டான். வெளி :20.12.15. 

கடவுள் பெரியவரும் சர்வ ஞானமுள்ள சர்வ வல்லமையுள்ளவரும், சர்வ வியாபியாவருமாயிருக்கிறார். தேவனுடைய வார்த்தையானது ஜீவனும் வல்லமையும் உள்ளதாயும் இருபுறமும் கருக்குள்ள எந்த பட்டயத்திலும் கருக்கனதாயும், ஆவியையும், கணுக்களையும் ஊனையும் பிரிக்கத்தக்கதாக உருவக்குத்துகிறதாயும் இருதியத்தின் நினைவுகளையும் யோசனைகளையும் வகையறுக்கிறதாயும் இருக்கிறது. அவருடைய பார்வைக்கு மறைவான சிருஷ்டி ஒன்றுமில்லை; சகலமும் அவருடைய கண்களுக்கு முன்பாக நிர்வாணமாயும் வெளியரங்கமாயுமிருக்கிறது; அவருக்கே நாம் கணக்கு ஒப்புவிக்க வேண்டும். எபி 4:12-13. 

முழுமையான உரை: உன் வாழ்க்கை பதிவேட்டில் பதிவு செய்யப்படுகிறது

கர்த்தர் நினைவுகளையும் யோசனைகளையும் கூட அவ்வளவு நுணுக்கமாக நியாயந்தீர்க்க போகிறாரென்றால், உண்மையாகவே அவர் மனிதனுடைய லேசான சிந்தனைகள், கேலி பேசுதல் முட்டாள்தனமான பேச்சுக்கள், தேவனுடைய நாமத்தை வீணிலே வழங்குதல், சபித்தல், ஆணையிடுதல் மாய்மாலம் நிர்விசாரம், கோபம், விரோதம், தூஷணம்பேசுதல், களியாட்டு, குடிப்பழக்கம், வேசித்தனம், விபச்சாரம், திருடு, கொலை, விக்கிரகாராதனை பில்லி சூனியம், தற்புகழ்ச்சி, அசுத்த காமம், கடுங்கோபம், போராட்டம், தேச துரோகம், அவிசுவாசம், பொறாமை, பெற்றோருக்கு கீழ்படியாமை, சுயநலம், பரிசுத்தமின்மை, அசுத்தமான பொருளாசை, பிறர் பொருள் இச்சித்தல், தற்பெருமை, பெருமை, தேவதூஷணம், நன்றி இல்லாமை, இயற்கைக்கு விரோதமான அன்பு, சமாதானத்தை மீறுதல், பொய்க் குற்றச்சாட்டுகள், கற்பை காக்காமல் இருத்தல், நல்லவர்களை தாழ்வாக நினைப்பது, மூர்க்கத்தனம், காட்டிக்கொடுத்தல், மண்டைக் கர்வம், மேம்பாடான எண்ணம், கடவுளை விட சிற்றன்பங்களை நேசித்தல், கடவுளுடைய வல்லமையை நிராகரித்தல், கிறிஸ்துவின் திரு இரத்தத்தை அசுத்தமாக நினைத்தால், மந்திரத்தில் நம்பிக்கை பொய்யை உண்டாக்கி அதை நேசித்தல், முதலியவைகளை அவர் விட்டு வைக்க மாட்டார்(கலாத்:5:19-21,2 தீமோ: 3.2-5) 

ஏனென்றால் சரீரத்தில் அவனவன் செய்த நன்மைக்காவது, தீமைக்காவது தக்க பலனை அடையும் படிக்கு நாமெல்லாரும், கிறிஸ்துவின் நியாயசனத்திற்கு முன்பாக வெளிப்பட வேண்டும்(2 கோரிந்5:10) 

நீதிமானே இரட்சிக்கப்படுவது அரிதானால் பத்தியில்லாதவனும் பாவியும் எங்கே நிற்பான். (1 பேதுரு 4:18) அப்பொழுது கர்த்தர் மோசேயை நோக்கி எனக்கு விரோதமாய் பாவஞ் செய்தவன் எவனோ அவன் பெயரை என் புஸ்தகத்திலிருந்து கிறுக்குப் போடுவேன் யாத் 32.33 நமது எண்ணங்களை கர்த்தல் தூரத்திலிருந்து அறிகிறார். நாம் அவர் முன் திறந்து வைக்கப்பட்ட புஸ்தகம் போல் இருக்கிறோம். நான் செய்த எல்லாவற்றையும் இயேசு சொன்னார்; அவரை வந்து பாருங்கள்(யோவான்4.29). 

ஜீவ புத்தகத்தில் ஒருவனுடைய பெயர் எழுதப்படவேண்டுமென்றால் நாம் இயேசுவினுடைய அழைப்பை ஏற்றுக்கொள்ள வேண்டும். ” வருத்தப்பட்டு பாரஞ் சுமக்கிறவர்களே நீங்கள் எல்லாரும் என்னிடத்தில் வாருங்கள்; நான் உங்களுக்கு இளைப்பாறுதல் தருவேன்மத்11.28 எல்லாரும் கடவுளுக்கு முன்பாக ஏதாவது பாவஞ் செய்திருக்கிறார்கள் ரோமர் 5:12 எல்லா மனிதருக்கும் ஒரு இரட்சகர் தேவை. “இயேசு அவனுக்கு பிரதியுத்தரமாக, ஒருவன் மறுபடியும் பிறவா விட்டால் தேவனுடைய இராஜ்ஜீயத்தைக் காண மாட்டான்”. யோவான் 3.3. நீங்கள் மனந்திரும்பி பிள்ளைகளைப் போல் ஆகாவிட்டால் பரலோக  இராஜ்ஜீயத்தில் பிரவேசிக்க மாட்டீர்கள்”  மத் 18.3 இயேசு ஒவ்வொரு வரையும் தன்னுடைய பாவத்தினின்று இரட்சிக்கப் பட, தன்னிடம் அழைக்கிறார். அவர் யாரை மன்னிகிறாரோ அவனை தன்னுடைய பிள்ளையாக ஏற்றுக் கொள்கிறார். பிள்ளை (குமாரன்) என்றால் தேவனுடைய சுதந்திரவாளியாகிறான்

ஜீவ புத்தகத்தில் நமது பெயர்களை பத்திரப் படுத்துவதற்குஇதோ சீக்கிரமாய் வருகிறேன். ஒருவனும் தன் கிரீடத்தை எடுத்துக் கொள்ளாதபடிக்கு உனக்குள்ளதை பற்றிக் கொண்டிரு”(வெளி3:11) என்று ஆண்டவர் சொல்கிறார். மத்26:41 ல் நீங்கள் சோதனைக்குட்படாதபடிக்கு விழித்திருந்து ஜெபம் பண்ணுங்கள். ஆவி உற்சாகமுள்ளதுதான். மாம்சமோ பலவீனமுள்ளதுஎன்று  இயேசு சொல்கிறார் அப்போஸ்தலனாகிய பவுல் கொரிந்திய விசுவாசிகளுக்கு 1கொரிந்த் 16:13 ல்விழித்திருங்கள், விசுவாசத்திலே நிலைத்திருங்கள், புருஷராயிருங்கள், திடன் கொள்ளுங்கள் என்று சொல்கிறார். கிறிஸ்தவ விசுவாசிகளுக்கு அப்போஸ்தலனாகிய பேதுரு 1 பேதுரு 4:7 ல் " எல்லாவற்றிருக்கும் முடிவு சமீபமாயிருக்கிறது

ஆகையால் தெளிந்த புத்தியுள்ளவர்களாயிருந்து ஜெபம் பண்ணுவதற்கு ஜாக்கிரதையுள்ளவர்களாயிருங்கள் என்று சொல்லுகிறார். அப்படியே 5ம் அதிகாரம் 8,9 வசனங்களில் தெளிந்த புத்தியுள்ளவர்களாயிருங்கள் விழித்திருங்கள். ஏனெனில் உங்கள் எதிராளியாகிய  பிசாசானவன் கெர்ச்சிக்கிற சிங்கம் போல் எவனை விழுங்கலாமோ என்று வகை தேடிச்சுற்றித் திரிகிறான் விசுவாசத்தில் உறுதியாயிருந்து அவனுக்கு எதிர்த்து நில்லுங்கள் ஜெயங் கொள்ளுகிறவள் எவனோ அவனுக்கு வெண் வஸ்திரம்  தரிக்கப்படும். ஜீவ புஸ்தகத்தில் இருந்து  அவனுடைய நாமத்தை நான் கிறுக்கிப் போடாமல், என் பிதா முன்பாகவும் அவருடைய  தூதர் முன்பாகவும், அவன் நாமத்தை அறிக்கையிடுவேன்வெளி 3:5. நம்மை செம்மைப்படுத்தி  நியாயத்தீர்ப்பு நாளில் கணக்கொப்புவிக்க நம்மை ஆயத்தம் செய்து கொள்ள இது கிருபையின் காலமாக இருக்கிறது. இந்த சாவுக்கேதுவான சரிரம் சீக்கிரம் மண்ணுக்குத் திரும்பும், அல்லது அவர் வருகையில் நாம் அவரைச் சந்தித்தோமானால், சத்திய வேதம் சொல்லுகிறபடி நம்முடைய உடல் அழியாததாக மாறும்

எவ்வளவு ஜாக்கிறதையாக நாம் நம்முடைய எண்ணங்களையும் வார்த்தைகளையும் கிரியைகளையும் காப்பாற்ற வேண்டும். “இதோ இரட்சிக்க கூடாத படிக்கு கர்த்தருடைய கை குறுகி போகவும் இல்லை; கேட்க கூடாத படிக்கு அவருடைய செவி மந்தமாகவும் இல்லைஏசா 59:1. அப்பெரிய முக்கியமான நாளன்று நாம் வெண் வஸ்திரம் தரித்தவர்களாய், அந்த மகிமையான மோட்சத்தில் பிரவேசிக்க, நம்முடைய இருதயத்தில் ஏதாவது குறை இருந்தால் அது கழுவப்பட (மன்னிக்கப்பட) நான் இயேசுவினிடத்தில் போவோமாகதீட்டுள்ளதும் அருவருப்பையும், பொய்யையும் நடப்பிக்கிறதுமாகிய ஒன்றும் அதில் பிரவேசிப்பதில்லை ஆட்டுக்குட்டியானவரின் ஜீவ புஸ்தகத்தில் எழுதப்பட்டவர்கள் மாத்திரம் அதில் பிரவேசிப்பார்கள்”  வெளி 21:27. 

தொடர்பு கொள்க

ஆர்டர் பாதைகள்