மரணத்திற்குப் பின்

இந்த வினாடியில் நீங்கள் உயிரோடிருக்கிறீர்கள் ;சுவாசித்து கொண்டிருக்கிறீர்; முறைப்படி உணவு அருந்திக் கொண்டிருக்கலாம்; அங்குமிங்கும் செல்லலாம், பணிபுரியலாம், உறங்கவும் செய்யலாம். சுகவாழ்வு வாழலாம் அல்லது ஏழ்மையில் ஊழலலாம். சூரியன் உதயமாகின்றது, அத்தமிக்கின்றது; ஓரிடத்தில் ஒரு மகவு பெறப்படுகின்றது. ஆன பிற நிகழ்ச்சிகளோடுங்ககூட எங்கோ ஒருவர் மரணம் அடைகின்றார்.

வாழ்க்கை முழுவதும் தற்காலிகச் செயல்கள் தாம்.
ஆனால் மரணத்திற்குப் பின் எங்கே செல்கின்றேன்?

நான் பெயர்க் கிறிஸ்தவனாகவும் இருக்கலாம்.
அல்லது மகம்மதியனாக இருக்கலாம்.
அல்லது புத்த சமயத்தயமைந்தவராயிருக்கலாம்.
அல்லது யூதராயிருக்கலாம்.
அல்லது வேறு ஒரு மார்க்கத்தாராயிருக்கலாம்.
அல்லது எந்த சமயத்தையும் நம்பாதவராகவுமிருக்கலாம். 
ஆனால் நாம் இந்த சிறப்பான வினாவுக்கு விடை மொழியத்தான் வேண்டும்,

ஏனெனில் இக்குறை நேர உலக வாழ்வுக்குப்பின் மனிதன் அவனது நிறைவான நீண்ட நித்திய இல்லம் ஏகின்றான்.

ஆனால் எங்கே?

ஏனெனில்: நீர் அடக்கம் பண்ணப்படும் கல்லறை உமது ஆத்துமாவை அடக்கி வைப்பதில்லை, அல்லது வன விலங்குகளாலோ, பறவைகளாலோ பூசிக்கப்பட்டாலும் அவை உமது ஆத்துமாவை விழுங்குவதில்லை, அல்லது உமது உடலை சுடலையில் இட்டாலும் உமது ஆத்துமாவை அது அழிப்பதில்லை.

உமது ஆத்துமா ஒரு போதும் இறப்பதில்லை!

முழுமையான உரை: மரணத்திற்குப் பின்

வானத்தையும், பூமியையும் படைத்த கடவுள் சொன்னார் “எல்லா ஆத்துமாவும் என்னுடையது “என்று.

(இந்த வாழ்விலே) இந்த உடலினால் நீர் புரிந்த செயல்களை அவை தீமையோ நன்மையோ மறுமையில் உமது ஆத்துமா அல்லது “நீர் சந்திப்பீர்”.

நாம் உண்மையுடன் தொழுதிருக்கலாம்
நாம் தவங்கள் இயற்றியிருக்கலாம்
நாம் களவாய் எடுத்ததைத் திரும்பத் தந்துமிருக்கலாம்
இவை எல்லாம் அவசியந்தான்.

ஆனால்

நமது பாவங்களுக்கு நாமே பிராயச்சித்தம் செய்ய இயலாது. வானலோகத்தின் கடவுள் பூமியின் நீதி தவறாத நியாயாதிபதி உமது பாவத்தையும், வாழ்வையும் அறிந்துள்ளார். உமது பாவத்துடன் எதிர்கால மறு உலகின் ஆசீர்வாதங்களுக்குள்ளும், மகிமைக்குள்ளும் நுழைய இயலாது.

ஆனால்

இந்த வானலோகக் கடவுள் அன்பின் ஆண்டவர் அவர் உமது வாழ்வும் ஆத்துமாவும் மீட்படைய ஒரு வழி வகுத்துள்ளார். 

நீர் ஜெபித்து, உமது பாவங்களை தேவனிடம் அறிக்கையிட்டால், நீர் நித்திய அழிவு, நரகத் தீ என்னும் சாபத்திற்குட்பட வேண்டியதில்லை. தேவன் இயேசுக் கிறிஸ்துவாகிய தமது மகன் மூலமாக மன்னிப்பை அருளுவார்.

இந்த இயேசு உமது தீய செயல்களுக்காக தண்டிக்கப்பட்டார், இந்த இயேசுவை, இக்கர்த்தரை மாத்திரமே நீர் தொழுது, ஜெபித்தால் அவர் உமது வாழ்வுக்குச்’ சாந்தி’ அருளி, மரணத்திற்குப் பின், மகிமையான வாழ்வைக் கொடுப்பார். ஆனால் இந்த இயேசு உயிருள்ள தேவனின் குமாரன் உமது சொந்த மீட்பராக முதலில் ஆக வேண்டும். பிறகுதான் உமது ஆத்துமாவுக்கான மகிழ்வும், ஆறுதலுமான நித்திய இல்லம் நிச்சயமாகும்.

ஆனாலோ! இயேசுவின் இந்த மீட்கும் அன்பை இவ்வாழ்வில் புறக்கணித்தோருக்கு அழிவின் பாதாளமும், முடிவற்ற தீயுமே பங்காகும். மரணத்திற்குப் பிறகு மீட்போ, திருப்பமோ இல்லை. முடிவின்றி நித்தியா, நித்தியமாக நிரந்தர அழுகையும், புலம்பலும்,பற்கடிப்புமே இருக்கும். தூய ‘விவிலிய’ நூல் ஒன்றைப்பெற்று உமக்கான தேவனுடைய திட்டத்தை நீரே படித்துப்பாரும்.

இந்தக் கடவுள், அவரது தூயத் திருமறையில் விரைவில் வரும் உலகின் இறுதி நியாயத் தீர்ப்பை பற்றி விவரமாக எச்சரித்துள்ளார். இந்தத் தூய வேதநூல் அந்த நிச்சயமான நியாயர்தீர்ப்பின் நாளுக்கு முன்னாகத் தெளிவான குறிப்பிடத்தகுந்த அடையாளங்கள் நிகழும் எனவும் முன்னறிவிக்கின்றது.

அவரது வருகைக்கு முன் சண்டைகளும் யுத்தங்களின் செய்திகளும். துன்பமும், நாடுகளுக்குள் கலக்கமும் அதாவது ஒன்றோடொன்று நாடுகள் போர் செய்து கொள்ளும் எனவும் அவைகளின் நோக்கங்கள் கொள்கைகள் ஆனவற்றின் வேறுபாடுகளைத் தீர்த்துக்கொள்ள முடியாதநிலமை இருக்கும் என்றும் கூறுகின்றது அது.

பல இடங்களிலும் பூமி அதிர்வுகளும், கொள்ளை நோய்களும் இருக்கும். இவை யாவும் சமீப ஆண்டுகளில் நிறைவேறிக்கொண்டு வருகின்றன. மேலும் தீயோர் மேலும் தீமையே புரிவர் என்றும் அது முன்னறிவிக்கின்றது. அதே சமயத்திலேயே மக்கள் எச்சரிக்கைகளுக்குச் செவி மடுக்காமல் கடவுளை நேசிக்காமல் இன்பப்பிரியராக ஆவர் என்றும் கூறுகின்றது.

நீதியுள்ள நமது பெரிய நியாயாதிபதி நமது தற்கால செல்வத்தினாலோ, ஏழ்மையினாலோ,புகழினாலோ, இகழ்வினாலோ, நிறத்தினாலோ, இனத்தினாலோ, குலத்தினாலோ, கொள்கையினாலோ,ஈர்க்கப்பட மாட்டார் என்று நாம் ஞாபகத்தில் கொள்ள வேண்டும். அவரது மீட்சியின் வாய்ப்பைப் புறக்கணித்தால் ஒரு நாளில் நமது படைப்புக்கர்த்தாவும் நீதிபதியுமானவர் முன்பாக செயலற்று நிற்போம். வரும் முடிவில்லா நித்தியத்தில் கடிகாரம் இராது. நூற்றாண்டுகளுக்கும் கணிப்பு இராது.

பாவிகள், கடவுளற்றவர்கள் இன்னவரது, உபத்திரவத்தின் புகை எப்பொழுதுமாகப் புகைந்து கொண்டே இருக்கும் அதே சமயத்தில் மீட்க பட்டவர்களது மகிழ்ச்சியும் பாடலும், பேரானந்தமும், சுகமும் மோட்சத்தில் முடிவில்லாததாகவே இருக்கும்.

இப்பொழுதே நீங்கள் ஒன்றைத்தெரிந்துகொள்ளுங்கள்! சீக்கிரமாகவே வேலை பிந்திப்போகலாம்.மத்தேயு, மாற்கு, லூக்கா, யோவான்,ஆகிய நற்செய்திகளை வாசியுங்கள் பின் ஒரு புதியேற்பாட்டையும் கேட்டுப் பெறுங்கள். அதன் பின் முழு விவிலியத்தையும் வாங்கிக்கொள்ளுங்கள்.

தொடர்பு கொள்க

ஆர்டர் பாதைகள்