வாழத்தகுந்த வாழ்க்கை

இவ்வாழ்க்கை  முழு மகிழ்வுடனும், வரும் நித்திய வாழ்வையும் நன்றாகத் துய்க்க வேண்டும் என்று விரும்பாத ஆணோ, பெண்ணோ, சிறுவனோ சிறுமியோ எங்கணும் உண்டோ? பேதுரு அப்போஸ்தலர் தனது முதல் நிருபத்தில் மூன்றாம் அதிகாரம் பத்து முதல் பன்னிரண்டு வசனங்களில்”ஜீவனை விரும்பி(அல்லது துய்த்து) நல்ல நாட்களைக் காண வேண்டுமென்றிருக்கிறவன்,பொல்லாப்புக் குத்தன் நாவையும், கபடத்துக்குத் தன் உதடுகளையும் விளக்கிக்காத்து , பொல்லாப்பை விட்டு நீங்கி, நன்மை செய்து சமாதானத்தைத் தேடி அதைப் பின் தொடரக்கடவன். கர்த்தருடைய கண்கள் நீதிமான்கள் மேல் நோக்கமாயிருக்கிறது. அவருடைய செவிகள் அவர்கள் வேண்டுதலுக்குக் கவனமாயிருக்கிறது, தீமை செய்கிறவர்களுக்குகோ கர்த்தருடைய முகம் விரோதமாயிருக்கிறது” என்று எழுதுகிறார். தற்காலத்துக்கும் நித்தியத்துக்கும் வேண்டிய அடித்தளம் அமைக்கவும், மகிழ்ச்சிக்கும் வேண்டிய போதனைகள் இந்த சில சொற்களிலேயே இருக்கின்றன. சங்கீதம் 34:12-16 ல் உள்ள வசனங்களையே அப்போஸ்தலர் எடுத்தாள்வது இதை மேலும் வலியுறுத்துகின்றதுs. 

எவ்வளவோ சமயங்களில் நாம் வம்பும், புத்தி ஈனமான பேச்சிலும், பரிகாசத்திலும் ஈடுபட்டிருக்கிறோம். எபேசியர் 5:4ன் படி அவை தகாத பாவம் என்னப்படுகின்றன. அனேக சமயங்களில் அப்படிப்பட்ட பேச்சுகள் உண்மையற்றவையாயும் இருக்கின்றன.  ஆகவே இரட்டை பாவமாகின்றன அவை. அது நல்ல நாட்களையும், வாழ்க்கையில் மகிழ்ச்சியையும் கொண்டு வருவதில்லை. நாவு சரீரத்தில் சிறிய அவயவமாயிருந்தும் அது ”நெருப்பு தான், அது அநீதி நிறைந்த உலகம்.. அது அடங்காத பொல்லாங்குள்ளதும் சாவுக் கேதுவான விஷம் நிறைந்ததுமாயிருக்கிறது” யாராலும் அடக்க முடியாது என்று யாக்கோபு சொல்லுகிறார். ஆயினும் கிறிஸ்தவர்கள் அதை அடக்கி,  ஆளுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது நீங்கள் அது முடியாதது என்று கூறலாம்.

முழுமையான உரை: வாழத்தகுந்த வாழ்க்கை

ஆயினும்” தேவனால் எல்லாம் கூடும்” மத்தேயு 19:26, யாக்கோபு 1:26 ல்” உங்களில் ஒருவன் தன் நாவை அடக்காமல் தன் இருதயத்தை வஞ்சித்து தன்னை தேவ பக்தி உள்ளவன் என்று எண்ணினால் அவனுடைய தேவ பக்தி வீணாயிருக்கும்” என்று வாசிக்கிறோம். வீணான மதம் நமக்கு இவ் வாழ்விலும் வரும் வாழ்விலும் நல்ல நாட்களை கொண்டு வராது. 

அப்போஸ்தலர் நாவு, உதடு இவற்றிலாகிய தீமைகளை மட்டுமன்றி எல்லாத் தீமைகளையும் சேர்த்துக்கொள்கிறார். பொல்லாப்பை விட்டு நீங்கி, நன்மை செய்து, சமாதானத்தைத் தேடி அதைப் பின் தொடரக் கடவன் என்று சொல்கிறார். நன்மை செய்யத்தெரிந்தும் அதைச் செய்யாது அலட்சியம் செய்தலையும் அவர் பாவம் என்கிறார். தேவனிடத்திலும் மனிதனிடத்திலும் சமாதானத்தைத் தேட வேண்டும். தேவனோடு சமாதானமாயிருக்க அவருடைய சமாதான கொள்கைகளுக்கு உட்பட வேண்டும். அதாவது உண்மையான உணர்வுள்ள மனஸ்தாபத்தினால் உண்டான, கிறிஸ்துவின் இரத்தத்தினால் கழுவப்பட்ட பாவம் இயேசு கிறிஸ்துவின் மூலம் இவ்வாறு நீதிக்குள்ளானவர்களே நீதிமான்களாக்கப்பட்டு நீதிமான்களோடு ஒன்றாக கருதப்படுவார்கள். அவர்களைப் பற்றியே வேத வாக்கியம்” கர்த்தருடைய கண்கள் நீதிமான்கள் மேல் நோக்கமாயிருக்கிறது. அவருடைய செவிகள் அவர்கள் வேண்டுதலுக்குக் கவனமாயிருக்கிறது” என்று கூறுகிறது. அவர்களுக்கு மட்டுமே தேவன் பக்கத்தில் இருக்கிறார். அவரது ஆசீர்வாதம் தொடரும். இருதயத்தில் சுத்தமுள்ளவர்கள் பாக்கியவான்கள் அவர்களும் ஆசீர்வாதமாய் இருப்பார்கள். சமாதானம் பண்ணுகிறவர்கள் பாக்கியவான்கள். 

இத்தகைய அறிவுள்ள வாழ்வுமுறையை எல்லோரும் கைக்கொள்ளுகிற வர்கள் அல்ல என்றும் சொல்லப்படுகின்றது. அப்படி கை கொள்ளாதவர்களைப் பற்றி தீமை செய்கிறவர்களுக்குகோ கர்த்தருடைய முகம் விரோதமாயிருக்கிறது என்று சொல்லப்பட்டுள்ளது. விரும்பி துய்க் கக்கூடிய நல்வாழ்க்கையையும் நன்னாட்களையும் அது உண்டாக்காது. 

கர்த்தர் ஏசாயாத் தீர்க்கதரிசியின் மூலம் நீதிமான்களுக்கு நன்மையும் தீயவர்களுக்கு கேடுமே உண்டாகும் என்று கூறியிருக்கிறார். 

தன் கடந்த வாழ்வைத் திரும்பிப் பார்க்கும் ஒரு பாவி அவனது பாவங்கள் கொடுமை செய்வதாலும் தன்னை அழுத்துவதாலும் கர்த்தருடைய முகம் அவனுக்கு விரோதமாக இருப்பதாக உணர்கிறான். அந்த நிலையில் அவன் வாழ்வை விரும்ப முடியாது. கர்த்தர் கண்டித்து உணர்த்தும்போது அதைப் பின்பற்றாமல் அப்படிப்பட்டவர் பல சமயங்களில் ஒரு பாவத்திலிருந்து மற்றொரு பாவத்திற்குத் தன்னை இழுத்துக் கொண்டு போவதற்குச் சாத்தானுக்குத் தன்னை ஒப்புக்கொடுத்து விடுகிற தளர்ந்த நிலைக்கு அவர் வந்துவிடுகிறார். தன்னையே மாய்க்கும் இந்த நிலையினின்று உலகமுழுவதும் மீள மக்களை எச்சரிக்கக்கூடிய வன்மையான சத்தம் எவ்வளவு அவசியம்! தற்கொலையின் மூலம் மனற்திரும்பக்கூடிய தருணம் துண்டிக்கப்படுவதனால் ஆத்துமாவும் உடலும் நரகத்தில் அழியுமே. வெளிப்படுதல் 21:8 ல் கொலை பாதகர் இரண்டாம் மரணமாகிய அக்கினியும் கந்தகமும் எரிகிற கடலிலே பங்கடைவார்கள் என்று நாம் வாசித்திருக்கிறோம். இவ்வாறான பயங்கரமான நடவடிக்கையினின்று அவர்களை விலக்கி வருத்தப்பட்டு பாரஞ்சுமக்கிறவர்களே! நீங்கள் எல்லாரும் என்னிடத்தில் வாருங்கள்: நான் உங்களுக்கு இளைப்பாறுதல் தருவேன் என்று அறை கூவும் இயேசுவின் அன்பின் அழைப்பை ஏற்றுக்கொள்ள வழிநடத்தினால் எவ்வளவு நல்லது. உங்கள் ஆத்துமாவுக்கு இளைப்பாறுதல் நித்திய நரக அழிவின் பயத்தினின்று இளைப்பாறுதல். உங்கள் பாவங்கள் நிவர்த்தி செய்யப்படும் பொருட்டு நீங்கள் மனந்திரும்பிக்குணப்படுங்கள் அப்போ 3:20 அப்போது நேசமுள்ள வாழ்வும், நல் இளைப்பாறுதலுள்ள காலமும் வரும். இவ்வுலகில் இல்லாவிட்டாலும் சொல்லமுடியாத விலைமிக்க நித்திய மோட்ச வாழ்வு பிறகு வரும். அப்போது தேவனுடைய சுதந்திரமும் கிறிஸ்துவுக்கு உடன் சுதந்திரருமாமே. “தேவன் தம்முடைய ஒரே பேறான குமாரனை விசுவாசிக்கிறவன் எவனோ அவன் கெட்டுப்போகாமல் நித்திய ஜீவனை அடையும்படிக்கு, அவரைத்தந்தருளி, இவ்வளவாய் உலகத்தில் அன்பு கூர்ந்தார்” யோவான் 3:16

தொடர்பு கொள்க

ஆர்டர் பாதைகள்